Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… தெறி மாஸான அப்டேட்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், 4G, இடிமுழக்கம், ஜெயில் போன்ற பல  படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |