Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைட்டு இந்த நம்பருக்கு கால் பண்ணு… இல்லன்னா வீடுபுகுந்து தூங்கிடுவே… 16 வயது சிறுமியை மிரட்டிய நடத்துனர்…!!!

16 வயது பள்ளி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அம்மாணவி எப்பொழுதும் ஒரு அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். அந்த அரசு பேருந்தில் திருவாடி கிராமத்தை சேர்ந்த 40 வயதான அய்யனார் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம்போல் மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, நடத்துனர் அய்யனார் அந்த மாணவியின் கையை பிடித்து பஸ் டிக்கெட்டை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பஸ் டிக்கெட்டில் தனது செல்போன் நம்பரை எழுதி கொடுத்து, இரவு போன் செய்யும்படி கூறியுள்ளார். அப்படி செய்யவில்லை என்றால் வீடுபுகுந்து உன்னை தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி மறுநாள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் அவரிடம் விசாரிக்கவே நடந்த சம்பவம் அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அருகிலுள்ள சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |