சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.
சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. அதேசமயம் சீனாவில் 50 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா தற்போதைய சீனாவின் மக்கள் தொகையை முந்திவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சீன நாட்டில் மக்கள் பலரும் பணம் இல்லாமல் தவித்து வரும் சூழலில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு குறைவு என்பதால் சிறப்பு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு கான்சே மாகாணத்தில் உள்ள லின்ஸ் கவுண்டி நகரில் 777 அமெரிக்க டாலர் உதவியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 57 ஆயிரம் வழங்கப்படும், 30,000 யுவான் வீடு வாங்க மானியமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சீன அரசு வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்தினை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.