பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் (செப்.,17) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியார் திரு உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
அதனை தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்திலுள்ள இராணுவ மைதானத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு, அலுவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்..
அந்த உறுதிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார்.. அனைத்து ஊழியர்களும் ஒரு பின் ஒருவராக சொன்னார்கள்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் வாசித்த உறுதிமொழி :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியை வாழ்வில் வழிமுறையாக கடைபிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.
சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது.
அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது.
சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!#HBDPeriyar143 pic.twitter.com/fsfreATuTa— M.K.Stalin (@mkstalin) September 17, 2021