Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று…. 4 நாட்களுக்கு மழை தொடரும்…. அலர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்கள், கடலோர, தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |