Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசிய பெண்…. வலைத்தளங்களில் பரவிய வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

யூடியூப் வலைத்தளங்களில் ஒருவரின் குடும்பத்தை அவதூறாக பேசிய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி இந்தியாவின் பயன்பாட்டில் இருந்த நிலையில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு அவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார். இவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவு செய்து வந்துள்ளார்.

இதை போல் தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவரும் டிக் டாக் செயலியில் பிரபலம் அடைந்துள்ளார். ஆனால் டிக் டாக் தடை செய்யப்பட்ட காரணத்தினால் அந்த பெண் பிற சமூக வலைதளங்களில் தனது வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதற்குப் பிறகு இந்தப் பெண் குறித்தும் அவரின் குடும்பத்தினர் பற்றியும் யூடியூப் மூலமாக திவ்யா அவதூறான கருத்துக்களை பரப்பியுள்ளார்.

இதனால் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் சமந்தமுடைய பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவ்யாவை தேடி வந்த நிலையில் நாகூர் தர்கா அருகாமையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை மையமாக வைத்து தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று திவ்யாவை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து நடத்திய விசாரணைக்கு பிறகு அவர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |