Categories
மாநில செய்திகள்

9 -12 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான நிபந்தனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும்.

8  ஆம்  வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இதில் நடுத்தர மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Categories

Tech |