Categories
மாநில செய்திகள்

முதல்வர் அறையில் பெரிய ஸ்கிரீன்… தினமும் பார்க்கும் ஸ்டாலின்… திமுக அரசின் மாஸ்டர் பிளான் …!!

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்காணிப்பதாக தெரிவித்துள்ளார்.

அனைத்துதுறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபின்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த தகவல்களை நான் தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் (ஆன்லைன் தகவல் பலகை ) ஏற்படுத்தப் போகிறேன். இந்த தகவல்களை எல்லாம் நான் தினமும் பார்க்க போகின்றேன். அந்த வகையில் தான் அந்த டேஷ்போர்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்னுடைய அறையிலே ஒரு பெரிய திரை (ஸ்கிரீன்) வைத்து அதை ஒளிபரப்ப கூடிய வகையில் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது  எனவே நாம் அறிவித்து இருக்க கூடிய வாக்குறுதிகளை,  நிறைவேற்றக் கூடிய அனைத்து அறிவிப்புகளை, அரசினுடைய முக்கியத் திட்டங்களை, எடுத்துக்கொண்டு இருக்கக்கூடிய உறுதிமொழிகளை…

இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்க நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டங்களும்.. தகவலும் இந்த தகவல் பலகையில் இடம்பெறும். அந்த தகவல்கள் தினமும் அப்டேட் செய்யப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகர் இதை ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட போகின்றார்.

அந்த டாஸ் போடு எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அறிவிப்பும் செயல்படும் விதம் குறித்து பிசிக்கல் டார்கெட் மற்றும் பானான்சியல் டார்கெட் என்று இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த டாஷ் போர்ட்டை  வைத்து நான் ஆய்வு செய்யப் போகின்றேன். அறிவிப்பு தொடர்பாக அரசாணை போட்டுவிட்டோம் என்பதால் அறிவிப்பு நடைமுறைக்கு வந்து விட்டதாக அர்த்தமில்லை. அந்த அறிவிப்பின் பலன் மக்களுக்கு  சென்றடைய வேண்டும், அப்போதுதான் நாம் அறிவிப்பை செயல் படுத்தி விட்டோம் என்று அர்த்தம் ஆகும் என்பதையும் நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இல்லை என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |