இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ள படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார் படம் ‘பிரண்ட்ஷிப்’. இதில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இப்படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது . இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் ‘பிரண்ட்ஷிப்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன் சிங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஜ்ஜி பா @harbhajan_singh என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு
படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது.#FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க #FriendShipFromTomorrow pic.twitter.com/du8UmVxhm0— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 16, 2021