பாண்டியன் ஸ்டோரின் புதிய புரோமோவைக் கண்ட ரசிகர்கள் பலரும் அடுத்தடுத்த இவ்வளவு சோகமா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது துக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி லக்ஷ்மி அம்மா அவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கண்ணன் வந்தால் தான் லட்சுமி அம்மாவை எடுக்க முடியும் என்று மூர்த்தியின் குடும்பத்தினர் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் இறந்தவரை வைத்திருக்கக் கூடாது. அது நல்லதுக்கு இல்லை என்று கூறுவதால் கண்ணன் இல்லாமலேயே அவர்களது அம்மாவை அடக்கம் செய்வதற்காக புறப்படுகின்றனர்.
இந்த துக்கமான புரோமோவைக் கண்ட ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்த சோக சம்பவம் நிகழ்ந்து வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.