வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2011 – 2021 காலகட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகிய கே.சி வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. அறப்போர் இயக்கம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் கே சி வீரமணி சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 28இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.