கந்துவட்டி வசூலிப்பதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளத்தில் திருமணி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மல்லிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதிநிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு உரிய வட்டியை மல்லிகா செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மல்லிகா மொத்தம் 26 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து மல்லிகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் 4 நிதிநிறுவனங்கள், 6 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் 5 பேர் மீது கந்துவட்டி வசூலிப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.