தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஏதாவது புகார் இருந்தால் அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தின் தரைதளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.