Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கெட்டுப் போன பொருட்கள் விற்பனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பாக குளிரூட்டப் பட்டிருக்கும் நிலையில் வைத்திருந்த இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் கெட்டுப் போயிருந்தால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கெட்டுப்போன உணவுப் பொருட்களை வைத்திருந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இதனைப் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்து தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |