Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென நின்ற திருமணம்…. மணமகளின் தாய்க்கு கொலை மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருமணத்தை பாதியில் நிறுத்தியதால் மணமகளின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் 20 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கும் கோட்டூரில் வசிக்கும் துரைராஜ் மகன் பிரபுவிற்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறால் நடக்க இருந்த திருமணம் நின்றுள்ளது.

இது குறித்து மணமகளின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மணமகன் பிரபு அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் இரண்டு பேருடன் மணமகளின் வீட்டுக்கு சென்று பெண்ணின் தாயிடம் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிரபுவை கைது செய்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட பிரபுவின் தாய் மற்றும் அவரின் உறவினர்கள் இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |