Categories
தூத்துக்குடி

இவர் சிலை வைக்க வேண்டும்…. நூதன முறையில் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் போன்றோர் வந்தனர். இவர்கள் அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து அவரது உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் அவர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை அமைக்க வேண்டும். அதன்பின் அவரது பெயரில் நடந்த ஆட்டுச் சந்தையில் மீண்டும் நடத்த வேண்டும். மேலும் நகராட்சிக்கு பொது மயானத்தில் தண்ணீர், கழிப்பிடம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |