Categories
தேசிய செய்திகள்

என்னது… தீபாவளிக்கு பட்டாசு கிடையாதா… பட்டாசு விற்க, வெடிக்க முற்றிலும் தடை… வெளியான அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அண்மை காலமாக சுற்றுச் சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறி தடைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் முக்கியமாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிக அளவில் உள்ளது.

எப்பொழுதும் காற்றின் தரம் குறைந்த நகரங்களின் பட்டியல்களில் டெல்லி முதன்மை இடம் வகிக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகையில் டெல்லியில் பட்டாசு விற்பதற்கு, வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது: “டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மக்களின் உயிரைக் காக்க முடியும் . கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் பட்டாசு வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பட்டாசுகளை சேமிக்க வேண்டாம்” என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |