சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் தற்போது சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை. அந்தவகையில் சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சொர்ணம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்வர்ணா. இவர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறையவே அவர் திருமணம் செய்து கொண்டு தன் கணவர் குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நடிகை ஸ்வர்ணா நீச்சல்குளத்தின் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நம்ம சொர்ணாவா இது என்று ஆச்சரியப்பட்ட வருகின்றனர்.