Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி இருப்பதால் அங்கிருந்து வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி பவானி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு கொடிவேரி அணைக்கு சென்றது.

இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் இந்த அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது 15 நாட்கள் வரை நீடிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |