மதுரை மாவட்டம் கீழவெளி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வில்லம்மாள். இவர் மதுரை காமராஜபுரம் இந்திரா நகரில் தனது கணவர் பெரியசாமி உடன் வாழ்ந்து வருகிறார். இவர் பண நெருக்கடி காரணமாக தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் முனியசாமி, சத்யா ,சிவா ஆகியோரிடம் 80 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதா மாதம் எட்டாயிரம் ரூபாய் வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் அவரால் சரிவர வட்டி கட்ட இயலாதலால் அம்மூவரும் வில்லம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் .
இதனால் மனமுடைந்த அவர் பணிபுரியும் போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அச்சமயம் சக ஊழியர்கள் அவரைப் பார்த்து அம்மருத்துவமனையிலே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் மூவர் மீதும் வில்லம்மாள் போலீசில் புகார் அளித்துள்ளார் . இந்த புகாரின் பேரில் அம்மூவரின் மீதும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.