Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்… விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்…!!!

2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் விண்ணப்பிக்கப்படும் பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் ஆகும். எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |