வீட்டு நீச்சல்குளத்திலிருந்து வெளியே செல்ல முடியாத 9 அடி முதலையை வனத்துறை அலுவலர் தோளில் சுமந்து நடந்து சென்று அசத்தியுள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் வீட்டின் ஒன்றில் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் இறங்கிய முதலை வெளியே வரமுடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து சுற்றிவந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத் துறை அலுவலர் பால் பெடார்ட் (Paul Bedard) உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.
ஆனால் வனவிலங்குகளை விரட்டுவதில் வல்லவரான பால் பெடார்டுக்கு நீருக்குள் முதலை இருந்ததால் பிடிப்பதற்கு சிரமமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலை சோர்வாகும்வரை காத்திருந்து நீருக்குள் பயமின்றி துணிச்சலுடன் இறங்கியுள்ளார். முதலையின் வாயை பிளாஸ்டிக் டேப்பினால் இருக்கமாகக் கட்டிவிட்டு தோளில் வைத்து தூக்கி வெளியே கொண்டுவந்துள்ளார்.

https://www.instagram.com/p/B3qQdXfBto-/?utm_source=ig_web_button_share_sheet