Categories
தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள்… ரூ. 35 லட்சம் மட்டுமே… ராஜஸ்தானில் முறைகேடு… 8 பேர் அதிரடி கைது…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் முன்பே கசிந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்ப்பூரில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் இராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக உள்ளது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் வினாத்தாளை அங்கிருந்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அந்த பகுதியில் உள்ள வேறு சிலருக்கு அனுப்பி, சரியான விடைகளை பெற்று மீண்டும் முகேஷுக்கு அனுப்ப, அதனை வாட்ஸ்அப் மூலம் ராம் சிங் என்பவருக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளை அறிவித்துள்ளார். இதற்காக 35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வு மையத்தில் வளாகத்திலேயே 10 லட்சம் ரூபாய் கை மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |