அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது தனி கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது புதிதாக வளர்ந்து வருவதால் வளர்ச்சிக்கான பாதை இருக்குமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இதைப் பூர்த்தி செய்வதற்கு இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தமிழக முதல்வர் அறிவிக்கின்ற புதிய திட்டங்கள் அனைத்தும் தகுதி இருக்கும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பணிபுரிந்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதன்பின் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்களோ அல்லது பிரச்சனையோ சம்பந்தமாக அதிகாரிகளை அணுகும் போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமெனவும், அவர்களுக்கான உதவி மற்றும் பதிலை தெரிவிக்க வேண்டுமென கலெக்டர் கூறியுள்ளார். இதனை அடுத்து மக்களின் அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், சாலை, மின்சாரம் ஆகியவற்றின் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வர வேண்டும். பின்னர் பத்திரிக்கைகளில் வெளிவருகின்ற புகார்கள் மீதும் தனி கவனம் செலுத்தி அவற்றை உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து திறம்பட மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணிபுரிந்திட வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் பணிகளில் காலதாமதம் ஏற்படுவது முற்றிலும் தவிர்த்து பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.