இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்டார்.
அதுமட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கானிற்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறுகிறேன் என அவர் பதிவிட்ட வீடியோ பெரிய விமர்சனத்துக்குள்ளானது.சமீபத்தில் அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒருநாள் போட்டியில் தான் அறிமுகம் ஆனாதையும், அன்றைய தினம் தனக்கான தொப்பியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் கையில் வாங்கியதையும் நினைவுக் கூர்ந்திருந்தார்.
இந்நிலையில், அவர் தனது தாய் நளினி பாண்டியாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக பதிவிட்டு நான் எப்போதும் உங்கள் பக்கம் தான் அம்மா என குறிப்பிட்டிருக்கிறார்.இதன்மூலம் அவர் தனது தாயின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியதோடு, தான் ஒரு அம்மாவின் செல்லப்பிள்ளை என்பதையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் பாண்டியா.
Always by your side mom ❤️ pic.twitter.com/zjIjL8ZF05
— hardik pandya (@hardikpandya7) October 18, 2019