Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாப்வே அணி வீரர் பிரெண்டன் டெய்லர் …..சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனா பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் .

ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் பிரெண்டன் டெய்லர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணியில் அறிமுகமானார் .35 வயதான பிரெண்டன் டெய்லர் இதுவரை 34 டெஸ்ட் போட்டியிலும், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார் .அத்துடன் டெஸ்டில் 6 சதங்களுடன் 2320 ரன்களும் ,ஒருநாள் தொடரில் 11 சதங்களுடன் 6677 ரன்களும்,  டி 20 -யில் 934 ரன்களும் குவித்துள்ளார்.

தற்போது  அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியுடன்  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார் .இதுகுறித்து டுவிட்டரில் ‘இந்த பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |