ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டும் களமிறங்கிய போடி, கடந்த 2015ஆம் ஆண்டு உள்ளூர் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக அவருக்கு 20ஆண்டுகால தடைவிதித்து அந்நட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து அவர் மீது எட்டு ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த வழக்கை விசாரித்த தென் ஆப்பிரிக்க குற்றவியல் நீதிமன்றம் குலாம் போடிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.