Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் இருந்த இளைஞனால்… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. பதறவைக்கும் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சிறுமி உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் இருந்து தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாலத்தின் அடியில் மறைத்து நின்றிருந்த இளைஞர் சிறுமியுடன் வந்த இரண்டு நண்பர்களையும் கத்தியால் தாக்குவதாக பயமுறுத்தி விட்டு சிறுமியை மட்டும் அருகில் இருந்த இருட்டு அறைக்கு இழுத்து சென்றுள்ளார்.

அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்பு அந்த நபரையும் கைது செய்தனர். விசாரணையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

Categories

Tech |