Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத்தின் 17வது முதல்வராக…. பூபேந்திர படேல் பதவியேற்பு….!!!

குஜராத் மாநில த்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.
அதன்  பிறகு குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில்  பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி  ஏற்றது . கட்லோடியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர படேல் குஜராத்தில் 17-வது முதல் மந்திரியாக பதவியேற்றார்.

Categories

Tech |