தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 6,000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்பட உள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.