பாலத்தின் மேல் இருபுறத்திலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் 3 சாலை சந்திப்பு இருக்கின்றது. இதற்கு அருகில் மழை நீர் ஓடையின் மேல் தரைப்பாலம் உள்ளது. இவ்வழியாக புங்கமுத்தூர், சி.பொ சாலை, செல்லப்பம்பாளையம், கம்பாலப்பட்டி, பெரிய பார்ப்பனூத்து போன்ற கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இதில் தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பக்கவாட்டில் அடிக்கடி சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் நிகழ்கிறது. மேலும் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருப்பதனால் வாகன ஓட்டிகள் கவனமில்லாமல் வரும்போது அதில் சரிந்து விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே பாலத்தின் மேல் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.