Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்…. “உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும்”… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

சென்னை மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.. கடந்த சில மாதங்களாக இதுபோன்று அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது..

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என்றும் 12 மீனவர்கள் இந்த மீட்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கம் செய்யப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்..

Categories

Tech |