Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பகுதியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஐயப்பன் மது குடித்து விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகியும் ஐயப்பன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அமலா அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அமலா அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |