தொழிலாளி தடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கறி வெட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென பொன்னுசாமி மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பொன்னுசாமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.