Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து புகார் வந்தால் உடனே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகள் செய்த போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக ஒரு நிமிடம் கூட மதுக்கடைகளை திறந்து வைக்கக் கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

வருவாய் ஈட்டுவது அரசின் நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். அனைத்து மதுக்கடைகளுக்கும் முன்பும் விலைப்பட்டியல் வைக்கப்படும். அந்த விலைக்கே மதுவை விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்றால் கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதே பொதுமக்களிடமிருந்து வரும் புகாருக்கு அவ்வபோது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |