தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.