உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும்.
இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னர் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.