ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிளை டிரைவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான சங்கர் பூலாம்பட்டி ஏரி வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஏரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை சங்கர் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது லாரி டிரைவர் குண்டுகல்லூரைச் சேர்ந்த பெரிச்சி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டதாக தெரிகின்றது. இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பெரிச்சியை கைது செய்தனர். மேலும் பெரிச்சி வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.