Categories
கிரிக்கெட் விளையாட்டு

சக வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர்…. வைரல் வீடியோ ….!!!

14-வது  ஐபிஎல் சீசன் தொடரின் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்தில் உள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன .இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டது. இதில் கடந்த 8ஆம் தேதியன்று இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது .இதில் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே வருகின்ற 19-ஆம் தேதி முதல்        14-வது  ஐபிஎல் சீசன் 2-வது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

https://twitter.com/DelhiCapitals/status/1436547550476058627

இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணிக்காக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடியுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .தற்போது ஐபிஎல் தொடர் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது .இதற்கு முன் நடந்த முதல் பாதி ஆட்டத்தில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் தொடரில் இருந்து விலகினார்.

Categories

Tech |