மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதி முதல் 50 சதவீதம் மாணவர்களுடன் திறக்கப்படும்.
மாநிலத்தில் குறைந்தது 1400 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 13 லட்சத்துக்கும் அதிகமாக மாணவர்கள் படிக்கின்றனர். அதில் இந்த வருடம் இரண்டு லட்சம் புதியவர்கள் சேர்ந்துள்ளனர். அதனால் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்துமாறு அனைத்து ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.