Categories
உலக செய்திகள்

மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பு…. முதலிடத்தில் இருக்கும் மகாராணி…. இளவரசரின் பரிதாபநிலை…!!

இங்கிலாந்தில் முன்னதாக மிகவும் பிரபலமான இளவரசர் ஹாரிக்கு தற்போது பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள்.

இங்கிலாந்த் ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் தற்போது மக்களிடையே எந்த நபர் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார் என்ற வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு முன்னதாக மக்களிடையே ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் மிகவும் பிரபலமாக இருந்த இளவரசர் ஹரிக்கு பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணமாக இளவரசர் ஹரியும், அவரது மனைவியும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து சுமார் 80 சதவீத வாக்கினைப் பெற்று ராஜ குடும்பத்திலுள்ள மகாராணியார் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார்.

Categories

Tech |