Categories
அரசியல்

வெறும் 3 மாதத்தில் செம…. “முதல்வேருக்கே முதல்வராக ஸ்டாலின்”…. உதயநிதி பெருமிதம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சட்டமன்றத்தில் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 110 விதியின் கீழ் முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். முதல்வரின் சிறப்பான அறிவிப்பால் யாருமே திமுக அரசை எதிர்த்துப் பேசுவதில்லை. எதிர்க்கட்சியினர் கூட திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டி பேசும் அளவிற்கு உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. கடந்த மூன்று மாத கால திமுக அரசின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். இப்படியே தொடர்ந்தால் அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் சென்று வாக்குக் கேட்க தேவையே இல்லை மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |