டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதில் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. மேலும் டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இது இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும். குறிப்பாக டெல்லியில் தேசிய தலைநகர் பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மனேசர், பரீசதாபாத், நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.