Categories
அரசியல்

குஜராத் புதிய முதல்-மந்திரி யார்…? விஜய் ரூபவானி சொன்ன முக்கிய தகவல்…!!!

குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென பதவி விலகி இருப்பது குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்திபென் படேல்க்கு பின் 2016 முதல் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குஜராத் முதல்-மந்திரியாக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சித் தலைமை மற்றும் பிரதமருக்கு நன்றி.

மேலும் என்னை வழிநடத்திச் சென்ற கட்சித் தலைவர் ஜேபி நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் நலன் கருதி தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய செயல்பாட்டுக்கு புதிய தலைமை தேவைப்படும். மக்களுக்கு சேவையாற்ற பாஜக எப்போதுமே வாய்ப்பு வழங்கி வருகிறது. குஜராத்தினுடைய புதிய முதல் மந்திரி யார்? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |