Categories
தேசிய செய்திகள்

ஸ்கூட்டரின் மேல் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… லாவகமாக மீட்ட இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பாம்பினைப் ஒருவர் லாவகமாக பிடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கனமழையின் காரணமாக பாம்பு ஒன்று ஸ்கூட்டருக்குள் சென்று பதுங்கி விட்டது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபர் அதனை பத்திரமாக மீட்டுள்ளார். முதலில் ஸ்கூட்டரின் முன் பக்கம் இருக்கும் கண்ணாடி பாகத்தை அவர் அகற்றிய உடன் சீரிய பாடி பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பாம்பு பிடிப்பவர் சற்றும் பதட்டப்படாமல் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு காலியாக இருக்கும் வாட்டர் கேனை பயன்படுத்தி பாம்பின் போக்கிலேயே சென்று அதனை வாட்டர் கேனுக்குள் போக வைத்து லாவகமாக பிடித்தார். இதனை வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது போன்று யாரும் முயற்சிக்க கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |