Categories
மாநில செய்திகள்

பாரதி பிறந்த நாளை…. ‘சாதி ஒழிப்பு’ நாளாக அறிவிக்க வேண்டும்… பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!!

பாரதி பிறந்த நாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்..

மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.. நேற்று பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது..

இந்தநிலையில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.. ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது, விடுதலை தீயில் வெந்து எழுந்தவன், வீரம் மிக்க கவிஞன், பாரதி பிறந்தநாள்- இனி மகா கவி நாள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கிய அவன் பிறந்த நாளை, தளபதி அவர்களே! “சாதி ஒழிப்பு நாளாக” அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் உறுதி மொழி எடுக்க உத்தரவிட வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |