சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அனிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் வாணி போஜன், பிந்துமாதவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 4 மங்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் இருந்து இந்த படத்தின் கதை முழுவதும் சிறைச்சாலையில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.