பிரான்ஸ் நாட்டில், ஒரு சிறிய வகை விமானம் விபத்தானதில், விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள Nancy என்ற நகரத்திலிருந்து, நேற்று ஒரு சிறிய வகை விமானம், Essonne நகருக்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது, Dijon பகுதிக்கு சென்ற விமானம், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. எனவே, விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துவிட்டது.
விசாரணையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். காலநிலை மோசமடைந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது, காவல்துறையினர், இந்த விபத்தில் பலியானவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டுள்ளனர்.