இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் 18 வயதாகும் எம்மா ரடுக்கானு என்னும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் 5 வயதிலேயே டென்னிஸ் விளையாட்டு போட்டியில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எம்மா ரடுக்கானு அமெரிக்காவின் ஓபன் டென்னிஸ்ஸினுடைய இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்ந்த சம்பவமாகும்.
ஆகையினால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் உட்பட பல பிரபலங்களும் 18 வயதாகும் எம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.