செப்டம்பர் 14ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வரும் தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அரசு ஊழியர்கள் மருத்துவக் காரணங்களைத் தவிர்த்து வேறு எதற்காகவும் தடுப்பூசி போடாமல் இருக்க கூடாது. மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.